தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மைத்திரியும் மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்தவை (வீடியோ)

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மைத்திரியும் மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்தவை (வீடியோ)

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மைத்திரியும் மக்கள் பிரதிநிதிகளும் தெரிவித்தவை (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 9:41 pm

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளதாக இன்று (09) மதியம் தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.
ஜனாதிபதி  தேர்தலில் இறுதி உத்தியோகப்பூர்வ முடிவுகள் தேர்தல்கள் ஆணையாளரினால் தேர்தல்கள் செயலகத்தில், வேட்பாளர்களின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டன.
அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்தார்.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்காக செயற்பட்ட தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை தளபதிகளுக்கும் முப்படைகளின் அனைத்து வீரர்களுக்கும் நன்றியைப் பகிர்ந்துகொண்டார்.
தேர்தல்கள் செயலகத்தில் இருந்து வௌியேறிய மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.
காணொளியில் காண்க…

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்