தமிழ் மக்களின் வாக்குகளினாலேயே மைத்திரிபால வெற்றியீட்டினார் –  பா.அரியநேந்திரன்

தமிழ் மக்களின் வாக்குகளினாலேயே மைத்திரிபால வெற்றியீட்டினார் – பா.அரியநேந்திரன்

தமிழ் மக்களின் வாக்குகளினாலேயே மைத்திரிபால வெற்றியீட்டினார் – பா.அரியநேந்திரன்

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 7:53 pm

தமிழ் மக்களின் வாக்குகளினாலேயே  மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
வாக்களித்த மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன்,  தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் வெற்றியீட்டிய தற்போதைய ஜனாதிபதி,  மைத்திரிபால சிறிசேன அவர்கள் கடந்த 65 வருடகால வட கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் பற்றி அறிந்தவர் எனவும் இதனால் எதிர்காலத்தில் நல்லதொரு சமிக்ஞையை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்