இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்பு

இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2015 | 6:39 pm

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 6 ஆவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள  மைத்திரிபால சிறிசேன, சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 7ஆவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் பதவிப் பிரமாண நிகழ்வு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, இந்நிகழ்வில் புதிய ஜனாதிபதி முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்