அலரிமாளிகையிலிருந்து வௌியேறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

அலரிமாளிகையிலிருந்து வௌியேறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

அலரிமாளிகையிலிருந்து வௌியேறினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2015 | 8:14 am

மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறினாரென  ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

தம்மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி இன்று காலை 6.30 அளவில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் ரணி்ல் விக்ரமசிங்கவை அலரிமாளிகைக்கு அழைத்த ஜனாதிபதி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்துள்ளார்.

கௌரவமான முறையில் எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுமாறு  இதன்போது ஜனாதிபதி எதிர்க்கட்சி தலைவரிடம் கூறியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்