வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2015 | 1:38 pm

வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுபவர்கள் தராதரம் பாராது கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது அமைதியான முறையில் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

இதுவரையில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு, ரோந்து நடவடிக்கைகள், வீதித் தடைகள், வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பு பணிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்றதன் பின்னர், அமைதியை பேணுமாறு, பொலிஸார் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்