லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 6 வருடங்கள் (VIDEO)

லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 6 வருடங்கள் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2015 | 11:30 pm

சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 6 வருடங்களாகின்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்தவின் அனைவரது மனங்களிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க வழமை போல் தெஹிவளை அத்திடிய வீதி ஊடாக பத்திரிகை அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். முற்பகல் 10. 25 மணியளவில் ஊடக சுதந்திரம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பிய லசந்த விக்கிரமதுங்க படு கொலை செய்யப்பட்டார்.

சிரேஷ்ட ஊடகவியலாளராக மாத்திரமல்லாது மனிதாபிமானம் மிக்க மனிதராகவும் செயற்பட்டு லசந்த விக்கிரமதுங்க  பல் துறைசார் திறமைகளினால் முழுமையடைந்த ஒருவராக திகழ்ந்தார். உண்மைகளை முதலில் வெளிப்படுத்துவதற்கு லசந்த விக்கிரமதுங்க சண்டே லீடர் பத்திரிகையூடாக செயற்பட்டார்.

குற்றவாளி சமூகத்தில் எந்தவொரு நிலையில் இருந்தாலும் பின்வாங்காமல் தனது பத்திரிகையூடாக லசந்த விக்கிரமதுங்க தைரியமாக வெளிப்படுத்தினார். இவ்வாறான அவரின் ஊடக சேவையை கொளரவிக்கும் வகையில் ஊடக சுதந்திரத்திற்கான யுனெஸ்கோவின் குயிலமோ கேனோ விருது , மற்றும் NATIONAL PRESS CLUP, PRESS FREEDOM விருது ஆகிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

எம்,ரிவி, எம்.பி.சி ஊடக வலையமைப்பின் தெபானாம கலையகம் மீதான தாக்குதலின் போதும் லசந்த விக்கிரமதுங்க இவ்வாறு குரல் எழுப்பியிருந்தார்.

[quote]இவ்வாறான வன்முறைகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் இது முதலாவது சந்தர்ப்பம் அல்ல இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது இறுதியாகவும் இருக்காது. ஆயினும் இதனை எதிர்கொள்ள நாம் தயார். அனைத்து ஊடக நிறுவனங்களும் இதற்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். [/quote]

லசந்தவின் மரணம் ஒரு தனி நபரின் மரணம் மாத்திரம் அல்ல அது முழு ஊடகத்துறையைம் மௌனிக்க செய்ய எடுக்கப்பட்ட முயற்சியாகும். தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சிவில் அமைப்புக்கள் இந்த படு கொலையைக் கேள்விப்பட்டு பேர் அதிர்ச்சிக்குள்ளானது.

உண்மையை வெளிப்படுத்துவதற்காக அவர் தனது ஊடக வாழ்வில் செயற்பட்டமையினாலேயே மரணம் அவரைப் பின் தொடர்ந்தது. அதனால் தான் அன்று லசந்தவின் பூதவுடலைச் சுற்றி பெருந்திரளான மக்கள் திரண்டனர். உலக சமூகம் இந்தக் கொலையை வன்மையாக கண்டித்தது.

எமது ஊடக வலையமைப்புடன் மிகுவும் நெருங்கி செயற்பட்ட நீங்கள் எமது துன்பங்களின் போதும்
எம் அருகில் இருந்தமையை மிகவும் கொளரவத்துடன் நினைவு கூருகின்றோம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்