சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கு காலையில் சென்று வாக்களியுங்கள் – கண்காணிப்பாளர்கள்

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கு காலையில் சென்று வாக்களியுங்கள் – கண்காணிப்பாளர்கள்

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலுக்கு காலையில் சென்று வாக்களியுங்கள் – கண்காணிப்பாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2015 | 9:43 am

ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு காலையில் சென்று வாக்களிக்குமாறு, தேர்தல் கண்காணிப்பாளர்கள் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

11,200 பேர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 360 நடமாடும் ரோந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், 35 சர்வதேச கண்காணிப்பாளர்கள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, 7,700 கண்காணிப்பாளர் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

460 நடமாடும் சேவைகள் மூலம் நேற்றுமுதல் நாடெங்கிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமது அமைப்பினர் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2,500 கண்காணிப்பாளர்கள் நாடெங்கிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின், தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர சுட்டிக்காட்டினார்.

நூற்றுக்கணக்கான நடமாடும் பிரிவுகள் ஊடாக கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெறாதவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று, தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியுமென தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்