தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பதற்காக மாவட்ட ரீதியில் முறைப்பாட்டு விசாரணை நிலையங்கள்

தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பதற்காக மாவட்ட ரீதியில் முறைப்பாட்டு விசாரணை நிலையங்கள்

தேர்தலுடன் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பதற்காக மாவட்ட ரீதியில் முறைப்பாட்டு விசாரணை நிலையங்கள்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2015 | 9:50 am

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கு மாவட்ட ரீதியில் முறைப்பாட்டு விசாரணை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

இந்த முறைப்பாட்டு விசாரணை நிலையங்கள் காலை 6.30 முதல் இயங்குவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக மாவட்ட ரீதியில் தொலைபேசி இலக்கங்களும், தொலைநகல் இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, களுத்தறை மாவட்டங்களில் 0112 073 816, 0112 073 817 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும், 0112 073 800 – 0112 073 801 ஆகிய தொலைநகல் இலக்கஙகளின் ஊடாகவும் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் 0112 073 818 – 0112 073 819 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும், 0112 073 802, 0112 073 803 என்ற தொலைநகல் இலக்கங்களுக்கும் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தென் மாகாணத்தின் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின், 0112 073 820 மற்றும் 0112 073 821 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும், 0112 073 804, 0112 073 805 ஆகிய தொலைநகல் இலக்கங்களின் ஊடாகவும் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

0112 073 822 மற்றும் 0112 073 823 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முறைப்பாடுகள் குறித்து அறிவிக்க முடியும்.

அதேவேளை 0112 073 806, 0112 073 807 என்ற தொலைநகல் இலக்கங்களின் ஊடகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 0112 073 824 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், 0112 073 807, 0112 073 808 என்ற தொலைநகல் இலக்கங்களின் ஊடாகவும் முறைப்பாடுகளை அறிவிக்கமுடியும்.

குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை 0112 073 825, 0112 073 826 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் .

அத்துடன், 0112 073 810, 0112 073 811 என்ற தொலைநகல் இலக்கங்களின் ஊடாக இந்த மாட்டங்களின் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

0112 073 827 எனும் தொலைபேசி இலக்கத்திற்கும், 0112 073 812 மற்றும் 0112 073 813 எனும் தொலைநகல் இலக்கத்திற்கும் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டஙகளில் முறைப்பாடுகள் குறித்து அறிவிக்க முடியும்.

ஊவா மாகாணத்தில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை 0112 073 828, 0112 073 829 எனும் தொலைபேசி இலக்கத்திற்கும், 0112 073 814, 0112 073 815 எனும் தொலைநகல் இலக்கத்திற்கும் அறிவிக்க முடியும்.

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் முறைப்பாடுகள் தொடர்பில் 0112 877 643 மற்றும் 0112 877 636 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும், 0112 877 626 மற்றும் 0112 877 644 எனும் தொலைநகல் இலக்கங்களுக்கும் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

இதேவேளை தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலகங்களுக்கும் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்