இன்றைய தேர்தலில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவு –  பெப்ரல் மற்றும் கெஃபே

இன்றைய தேர்தலில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவு – பெப்ரல் மற்றும் கெஃபே

இன்றைய தேர்தலில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவு – பெப்ரல் மற்றும் கெஃபே

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2015 | 9:16 pm

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற இன்றைய தினத்தில் 144 வன்முறைச் சம்பவங்கள் பதிவானதாக பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

கைகுண்டு எறியப்பட்ட சம்பவம் ஒன்றும் இதில் அடங்குவதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, வாக்களிப்பு தினமான இன்று 254 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கெஃபே அமைப்பு கூறுகின்றது.

தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டுகின்றார்.

எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்