இன்று முதல் ஒருவார காலத்திற்கு ஊர்வலங்களுக்கு தடை

இன்று முதல் ஒருவார காலத்திற்கு ஊர்வலங்களுக்கு தடை

இன்று முதல் ஒருவார காலத்திற்கு ஊர்வலங்களுக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2015 | 9:36 pm

இன்று முதல் ஒருவார காலத்திற்கு பட்டாசு கொளுத்துதல் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண இதனைக் கூறினார்.

தேர்தல் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்