ஹட்டனில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்த இருவர் கைது

ஹட்டனில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்த இருவர் கைது

ஹட்டனில் சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை வைத்திருந்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 7:53 am

ஹட்டனில் சட்டவிரோதமாக 600 க்கும் அதிகமான மதுபான போத்தல்களை வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹட்டன், மல்லியப்பூ சந்தியில் நேற்றிரவு 7.30 அளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இரகசிய தகவலொன்றின் பிரகாரம் லொறியொன்றை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், பெருமளவான மதுபான போத்தல்களை கைப்பற்றியதுடன், சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

தலவாக்கலையில் இருந்து மஸ்கெலியா, கினிகத்தேனை போன்ற பகுதிகளுக்கு லொறிமூலம் மதுபான போத்தல்களை கொண்டுசென்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்