வாழைச்சேனையில் நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞரை தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு

வாழைச்சேனையில் நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞரை தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு

வாழைச்சேனையில் நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞரை தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 7:42 am

வாழைச்சேனை, நாசிவன்தீவு, முகத்துவாரத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞரை தேடும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

வாழைச்சேனை இறங்குதுறையிலிருந்து இயந்திரப் படகு மூலம் முகத்துவாரத்தில் குளிப்பதற்காக சென்றிருந்த ஏழு இளைஞர்களில் இருவர் நேற்று நீரில் மூழ்கி காணாமற்போயிருந்தனர். இவர்களில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனர்த்தத்தில் உயிரிழந்த நபர், மாத்தளை இரத்தோட்டை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நீரில் மூழ்கி காணாமற்போன மற்றைய இளைஞன் நேற்றிரவு வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

கடற்படையினரின் உதவியுடன் இளைஞரின் உடலைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்