வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை ஆரம்பம்

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை ஆரம்பம்

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று காலை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 12:27 pm

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்காக, வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டன.

அத்துடன், தேர்தல் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களும் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு காலை முதல் அனுப்பிவைக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்தார்.

இம்முறைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 12, 314 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளையும், உத்தியோகத்தர்களையும் அனுப்பிவைக்கும் பணிகள் இன்று மாலை நிறைவடையும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிமுதல், மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு 1, 50 , 44 , 490 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்கும், வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்