முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை இணைக்கும் தேசிய வைபவம் காலியில்

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை இணைக்கும் தேசிய வைபவம் காலியில்

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை இணைக்கும் தேசிய வைபவம் காலியில்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 7:51 am

2015 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கான தேசிய வைபவம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேசிய வைபவத்தை காலி மஹிந்த வித்தியாலயத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதன்பொருட்டு அந்தந்த பாடசாலைகளின் வகுப்பாசிரியர்களுக்கு கல்வி அமைச்சினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்