மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 7:57 am

பொடி மெனிக்கே மற்றும் உடரட்ட மெனிக்கே ரயில்கள் பண்டாரவளை வரை போக்குவரத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

பொடி மெனிக்கே ரயில் இன்று அதிகாலை 5.55 க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

உடரட்ட மெனிக்கே ரயில் காலை 8.30 க்கு புறப்படவுள்ளது.

பண்டாரவளை மற்றும் பதுளை பகுதிகளுக்கு இடையிலான ரயில் பாதையின் சில இடங்களில் ஏற்பட்டிருந்த மண்சரிவு காரணமாக அந்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

இந்த ரயில் மார்க்கம் இன்னும் முழுமையாக மறுசீரமைக்கப்படவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும் ஓரிரு தினங்களில் மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர முடியுமெனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்