மதுபானசாலைகள்  நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படமாட்டாது – கலால் திணைக்களம்

மதுபானசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படமாட்டாது – கலால் திணைக்களம்

மதுபானசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படமாட்டாது – கலால் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 8:02 am

நாடளாவிய ரீதியில் காணப்படும் அனைத்து  மதுபான சாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபான சாலைகளை மூடுவது தொடர்பாக கலால் ஆணையாளர் நாயகம் வசந்த ஹப்புஆராச்சி பணிப்புரை விடுத்துள்ளதாக கலால் திணைக்கள ஊடக  பேச்சாளரும், கலால் அத்தியட்சகருமான  பிரபாத் ஜயவிக்ரம கூறியுள்ளார்.

இதனடிப்படையில் 8 மற்றும் 9 ஆம்  திகதிகளில் விசேட சேவையின் நிமித்தம் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த இரண்டு தினங்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்னையில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்