நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 9:40 am

நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 91 வீதம் வரை உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் நாட்டின் 73 நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகீ மீகஸ்தென்ன குறிப்பிடுகின்றார்.

இந்த நிலைமையின் கீழ் 28 நீர்த் தேக்கங்கள் வான் பாய்வதாகவும், நான்கு நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் இன்னும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலன்னறுவையில் கவுடுல்ல நீர்த் தேக்கம், ஹம்பாந்தோட்டையில் இஹலகல மற்றும் லுணுகம்வெஹெர நீர்த் தேக்கங்கள், குருநாகலில் தெதுருஓயா நீர்த் தேக்கம் ஆகியவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கூறினார்.

அண்மையில் நிலவிய மழை வெள்ளத்தினால் நீர்த் தேக்கங்கள், சிறியளவிலான மற்றும் நடுத்தர குளங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விபரங்களை திணைக்கள உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை சுமார் ஐயாயிரம் மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்