தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 71,100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 71,100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 71,100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 12:07 pm

ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளில் 71,100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பு, நடமாடும் சேவைகள், வீதிப் பாதுகாப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்கான பாதுகாப்பிற்கு இந்த உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

அத்துடன், தேர்தல் காலப்பகுதிகளில் பதிவு இலக்கத்தகடு அற்ற வாகனங்கள், போலியாக இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனங்கள் உட்பட சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்