க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடிகளில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடிகளில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மோசடிகளில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 10:38 am

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர  பரீட்சையில் மோசடிகளில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுமார் 6 இலட்சம் மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 120 இலட்சத்திற்கும் அதிகமான விடைத்தாள்களை பரிசீலிக்க உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். இதன் முதற்கட்டம் கடந்த 5 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் 16 ஆம் திகதியில் இருந்து,  23 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகளின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதிளில் இருந்து பெப்பரவரி 3 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்