கடந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக 483 முறைப்பாடுகள்

கடந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக 483 முறைப்பாடுகள்

கடந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக 483 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2015 | 3:56 pm

கடந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக 483 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதில் 426 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் செயற்திறன்யின்மை தொடர்பிலேயே கடந்த வருடம் 206 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பக்கச்சார்பாக செயற்பட்டமை தொடர்பில் 127 முறைப்பாடுகளும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் 97 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

071 036 10 10 என்ற தொலைபேசி இலக்கதுடன் தொடர்பு கொண்டு பொலிஸார் குறித்து முறைப்பாடு செய்யலாம் என ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்