விலை உயர்ந்த 1400 கார்களுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

விலை உயர்ந்த 1400 கார்களுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

விலை உயர்ந்த 1400 கார்களுடன் கடலில் கவிழ்ந்த கப்பல்

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2015 | 5:20 pm

சௌத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஹோ ஒசாகா என்ற சரக்குக் கப்பல் ஐசில் தீவு அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் அந்தக் கப்பலில் இருந்த 24 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.

இந்த சரக்குக் கப்பலில் 1200க்கும் மேற்பட்ட ஜாகுவார், லேன்ட் ரோவர் உள்ளிட்ட 1400 விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல், ஏராளமான கட்டுமானப் பொருட்களும் உள்ளன.

கடலில் கவிழ்ந்திருக்கும் கப்பலை நிமிர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், அதற்கு சில நாட்கள் ஆகும் என்றும், கப்பல் கடுமையாக சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகப்படியான பளு ஏற்றப்பட்டது விபத்துக்குக் காரணமல்ல என்றும், சரக்குகளை சரியாக அடுக்காததே கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்