ரம்புக்கணை தேர்தல் வன்முறை – விசாரணை ஆரம்பம்

ரம்புக்கணை தேர்தல் வன்முறை – விசாரணை ஆரம்பம்

ரம்புக்கணை தேர்தல் வன்முறை – விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

06 Jan, 2015 | 10:49 am

ரம்புக்கணை ரயில் நிலையத்திற்கு அருகில், இரு அரசியற் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோதல் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நேற்றிரவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலில் காயமடைந்தவர்களில் ஒருவர் கேகாலை பொது வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் ரம்புக்கணை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்