தேர்தல் கடமைகளில் 65,000 பொலீஸார்

தேர்தல் கடமைகளில் 65,000 பொலீஸார்

தேர்தல் கடமைகளில் 65,000 பொலீஸார்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

06 Jan, 2015 | 10:39 am

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் இன்று காலை முதல் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அசம்பாவிதங்கள் இடம்பெறும் பட்சத்தில், உரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, அசம்பாவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தலை முன்னிட்டு 420 பொலிஸ் காவலரண்கள் நாடெங்கிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைதுசெய்யுமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாக அஜித் ரோஹன கூறினார்.

அத்துடன், தேர்தல் சட்டங்களுக்கு அமைய இன்றும், நாளையும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும் பகுதிகளில் நாளைமுதல் ஆறாயிரம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்