திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு: திரிஷா அதிரடி

திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு: திரிஷா அதிரடி

திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு: திரிஷா அதிரடி

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2015 | 5:34 pm

திரிஷா, 13 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கதாநாயகி ஆவதற்கு முன் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், 2002 இல் வெளியான ‘மௌனம் பேசியதே’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் திரிஷா.

பிறகு ‘சாமி’, ‘லேசா லேசா’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆறு’, ‘கிரீடம்’, ‘குருவி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மங்காத்தா’ என பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னட திரைப்படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

சமீபத்தில் அவருடன் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தார்.

இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா திருமணம் குறித்து தனது டுவிட்டரில், “திருமணத்துக்குப் பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்ல மாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன்” என்றார்.

இதனிடையே, அஜித் ஜோடியாக திரிஷா நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற 29 ஆம் திகதி வௌியாகிறது.  ஜெயம் ரவி ஜோடியாக நடித்த ‘பூலோகம்’ படம் வௌியாகத் தயாராக இருக்கிறது. இவைதவிர ‘அப்பாடக்கர்’ என்ற படத்திலும் நடிக்கிறார் திரிஷா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்