உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி  அறிவிப்பு

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2015 | 5:11 pm

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை  அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கான பயிற்சிப் போட்டிகளில் பிப்ரவரி 18 ஆம் திகதி முதல் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

அதன்படி, இன்று மும்பைபில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 30 பேர் கொண்ட உத்தேச அணியிலிருந்து 15  வீரர்களை சந்தீப் பாட்டில் தலைமையிலான தேர்வாளர்கள் குழு தேர்ந்தெடுத்தது.

அதன்படி உலகக்கோப்பை போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி  வீரர்கள் விவரம் வருமாறு:

தோனி (தலைவர்), விராட் கோலி (து. தலைவர்), அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, அக்ஷர் படேல், அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

முத்தரப்பு போட்டிக்கான இந்திய அணி

தோனி (தலைவர்), விராட் கோலி (து. தலைவர்), அஜிங்க்யா ரஹானே, ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ஸ்டூவர்ட் பின்னி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, அக்ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஷமி, உமேஷ் யாதவ், மோஹித் சர்மா இஷாந்த் சர்மா, தவல் குல்கர்னி.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்