இன்று நள்ளிரவிற்கு முன் கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டும் – தேர்தல்கள் திணைக்களம்

இன்று நள்ளிரவிற்கு முன் கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டும் – தேர்தல்கள் திணைக்களம்

இன்று நள்ளிரவிற்கு முன் கட்அவுட்கள் அகற்றப்பட வேண்டும் – தேர்தல்கள் திணைக்களம்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

06 Jan, 2015 | 10:46 am

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

இது தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் யூ அமரதாஸ தெரிவித்தார்.

அதேபோன்று, அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் உள்ள கட்சி அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் இன்று அகற்றப்பட வேண்டுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

நாளைய தினத்திற்குள் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கும் தவறும் கட்சி அலுவலகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என யூ அமரதாஸ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்