இன்றிலிருந்து  ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் செயலகம்  அறிவுறுத்தல்

இன்றிலிருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல்

இன்றிலிருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

06 Jan, 2015 | 6:09 pm

இன்றிலிருந்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களற்ற மௌன காலப்பகுதியாக இந்த காலப்பகுதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிவித்தலில் தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்