அடையாள அட்டையின்றி வாக்களிக்க அனுமதி இல்லை – தேர்தல்கள் ஆணையாளர்

அடையாள அட்டையின்றி வாக்களிக்க அனுமதி இல்லை – தேர்தல்கள் ஆணையாளர்

அடையாள அட்டையின்றி வாக்களிக்க அனுமதி இல்லை – தேர்தல்கள் ஆணையாளர்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

06 Jan, 2015 | 10:55 am

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளை மறுதினம் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையங்களிக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்காளர்கள் காலை 7 மணிமுதல் தமது வாக்குகளை பதிவு செய்யமுடியும் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

தேர்தல் நடவடிக்கைளுக்காக பிரதேச மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், தேசிய அடையாள அட்டை இல்லாது வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் பஸ்களின் பின்னால் செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பிரதிநிதிகளும், வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லும் பஸ்களின் பின்னால் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வாக்கெண்ணும் நிலையத்தின் இறுதி பொலிஸ் காவலரண் வரையில் குறித்த பிரதிநிதிகள் செல்ல முடியுமென கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் கூறினார்.

அத்துடன், வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்