வாக்காளர் அட்டைகள் விநியோகம் நேற்றுடன் நிறைவு; 94 வீதமே விநியோகம் – த.தி

வாக்காளர் அட்டைகள் விநியோகம் நேற்றுடன் நிறைவு; 94 வீதமே விநியோகம் – த.தி

வாக்காளர் அட்டைகள் விநியோகம் நேற்றுடன் நிறைவு; 94 வீதமே விநியோகம் – த.தி

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 6:58 am

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை 94 வீதம் நிறைவுபெற்றுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 6 வீதமானவற்றை விநியோகிக்க முடியாத நிலை காணப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் காலஅவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி உரிய தபாலகங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்