முதலாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இன்று திறப்பு

முதலாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இன்று திறப்பு

முதலாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இன்று திறப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 7:50 am

2015 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்படவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறுகின்ற 68 பாடசாலைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்ததலின் வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் கடமையில் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் பாடசாலை கட்டடங்களும் தேர்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ளன

இதன் காரணமாக நாளை முன்தினம் தொடக்கம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சாதாரணத் தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறுகின்ற பாடசாலைகள் அடங்களாக அனைத்து பாடசாலைகளும் மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதியே திறக்கப்படவுள்ளன

இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரன்ஸிஸ்ஸின் வருகைக்காக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பொலிஸார் தங்கவைக்கப்பட்டுள்ள 48 பாடசாலைகள் எதிர்வரும் 11 திகதி முதல் 15 திகதிவரை மூடப்பட்டு 16 திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்