நான் அமைச்சராக இருந்த காலத்தில் பொலன்னறுவையை முன்னேற்ற தவறவில்லை – ஜனாதிபதி

நான் அமைச்சராக இருந்த காலத்தில் பொலன்னறுவையை முன்னேற்ற தவறவில்லை – ஜனாதிபதி

நான் அமைச்சராக இருந்த காலத்தில் பொலன்னறுவையை முன்னேற்ற தவறவில்லை – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 12:33 pm

தான் அமைச்சராக இருந்த போது பொலன்னறுவை மாவட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தான் மறக்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

[quote]சிலர் , பொலன்னறுவையை நாங்கள் கவனிக்கவில்லை என கூறுகின்றனர். ஆனால் , தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சராக நான் இருந்த போது பொலன்னறுவையை கவனித்தேன். யாரையும் கேட்டு செய்யவில்லை. நான் தெரிவாகியதை அடுத்து  பொலன்னறுவைக்கு தொழில் நுட்ப கல்லூரியை வழங்கினேன்.  கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் மீனவர் கிராமத்தினை முதலில் பொலன்னறுவைக்கு பெற்றுக்கொடுத்தேன். 320 மில்லியன் ரூபாவினை வீரக்கொட்டிய மத்திய கல்லூரிக்கு வழங்கவில்லை.  ஆனால் பொலன்னறுவையில் உள்ள வறுமைப்பட்ட பிள்ளைகளுக்காக பாடசாலைக்கு நிதியினை வழங்கினேன். இவ்வாறு தான் பொலன்னறுவையை கவனித்தேன். அதனை நீங்களும் நாங்களும் மறக்கவில்லை .[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்