திருகோணமலையில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்

திருகோணமலையில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்

திருகோணமலையில் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 8:23 am

திருகோணமலை நகரில் சிலர் தேர்தல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் திரைகள் சிலவற்றை கண்காணிப்பதற்காக உதவி தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட குழுவினர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்