ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 7:14 am

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு பிரசார நடவடிக்கையையும் முன்னெடுக்கமுடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதி செய்வதற்கான பிரசாரக் கூட்டங்கள் சில இன்றும் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக் கூட்டங்களும் இன்று முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.

இதனிடையே, இன்று நள்ளிரவுக்கு பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்கான ஒழுங்குகளை செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறுகின்றது.

சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்