ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் தொடர்பில் 135 பேர் கைது

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் தொடர்பில் 135 பேர் கைது

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் தொடர்பில் 135 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 6:50 am

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 14 பிரதேச அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இதுவரை 320 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் சட்டம் மீறப்பட்டமை குறித்து ஆயிரத்து 96 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 116 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.

இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தெரடர்பில் 256 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தமது அமைப்பிற்கு 797 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆரச்சி சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்