கஹவத்தையில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம்

கஹவத்தையில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம்

கஹவத்தையில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2015 | 8:18 am

கஹவத்தை நகரில்  புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள்மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டமொன்றுக்காக மேடையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள்மீது அதிகாலை இரண்டு மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

ஜீப் வாகனங்கள் சிலவற்றில் வந்தவர்களில் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் மூவர் காயமடைந்ததாகவும்  அவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற உடனேயே பொலிஸ் ரோந்து வாகனமொன்று அங்கு வந்ததால் ஏற்படவிருந்த பாதிப்புக்கள் தடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்காக வந்தவர்களை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து சிலர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அலுவலகத்தை சேதப்படுத்தியுள்ளதுடன் பின்னர் அவர்கள் இரத்தினபுரி எம்பிலிப்பிட்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்