சிலர் விலகிச்சென்றாலும் 136 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சிலர் விலகிச்சென்றாலும் 136 பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Kanthaverl Mayooran

04 Jan, 2015 | 8:56 pm

சிலர் கட்சியை விட்டுச் சென்றாலும், 136 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி ​வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஐனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரதான பிரசாரக் கூட்டமொன்று நேற்று ஹோமாகம பகுதியில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி

இரண்டு மூன்று தவளைகள் பாயலாம். எனினும் இந்த நாட்டு மக்கள் அங்கும் இங்கும் பாயமாட்டார்கள் என்பதனை நான் தெளிவாக நினைவுபடுத்துகின்றேன். சென்றவன், சென்றவள் அனைவரும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறுகின்றனர். அதாவது அழகாக சொல்வதற்கு கற்பித்துள்ளனர். சென்றவள் என்று என்னால் குறிப்பிட முடியும். அவர் எனது மகள் என்றே கூறிக் கொண்டு இருந்தார். நான் அவ்வாறான சிறியவர்கள் தொடர்பில் பேசுவதில்லை, எனினும் அரசியல் தொடர்பில் கற்றுக் கொள்ளுமாறு கூறுகின்றேன். அனைவருக்கும் நான் அதனையே கூற வேண்டும். குறிப்பாக இளம் அரசியல்வாதிகளுக்கு இதனைக் கூறுகின்றேன். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம். இளம் பருவத்த்தில் இருந்து அரசியலின் தவறான நிலைப்பாடுகளுக்கு செல்ல வேண்டாம். அது அழிவின் ஆரம்பமாகும். அரசியல் ரீதியில் காட்டுக்குச் செல்லும் பயணமாகும்

இதேவேளை பாராளுமன்றத்தில் தமது பக்கம் தொடர்ந்தும் 136 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக கல்கிஸ்சையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார் .

இந்த பாராளுமன்றம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பாராளுமன்றமாகும். எத்தனை உறுப்பினர்கள் சென்றாலும் எமக்கு இன்றும் 136 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாராளுமன்றத்தை கூட்டினால் மேலும் பலர் எம்பக்கம் வருவர். எமது பக்கத்திற்கு எடுக்க வேண்டுமானால் அதனை செய்ய முடியும். ஆனால் எதிர்க்கட்சியொன்றும் இருக்க வேண்டுமல்லவா? அதுவே பிரச்சினை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்