வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 39 பேர் வரை உயிரிழப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 39 பேர் வரை உயிரிழப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 39 பேர் வரை உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Jan, 2015 | 4:06 pm

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது. 

நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இருவர் காணாமற் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுதவிர, ஏனைய மாவட்டங்களில் வெள்ளத்தினாலும், நீரில் மூழ்கியும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 38 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பான நிலையங்களில் தங்கியுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் இதுவரை 6,500 க்கும் அதிகமான வீடுகள் முற்றாகவும், 18,000 ற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்தது.

இதேவேளை, நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (03) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின், மண்சரிவு ஆய்வுப் பிரிவின் தலைவர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்