வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

03 Jan, 2015 | 4:12 pm

வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவவின் வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 11.50 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் லக்ஷ்மன் வேண்டருவ வீட்டில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டினால் வீட்டின் காவலாளி காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

வட மேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வேண்டருவ, நேற்றிரவு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்காக இணைந்துகொண்டார்.

அரசியல் நோக்கத்தின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்