மலையக மார்க்கத்திலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

03 Jan, 2015 | 4:38 pm

மலையக மார்க்கத்திலான ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக ரயில் மார்க்கத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவினால், ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. 

இருப்பினும், ரயில் மார்க்கத்தில் நிரம்பியிருந்த மண் அகற்றப்பட்டதைடுத்து இன்று (03) முற்பகல் தொடக்கம் கொழும்பிலிருந்து பண்டாரவளை வரையான ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதம கட்டுப்பாட்டாளர்  டீ.வீ.குணபால குறிப்பிட்டார். 

மேலும், பண்டாரவளையிலிருந்து பதுளை வரையான ரயில் மார்க்கத்தில் சரிந்து வீழ்ந்துள்ள மண்னை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ரயில் மார்க்கத்தில் நிரம்பியுள்ள மண்னை அகற்றிய பின்னர் பதுளை வரையான ரயில் சேவை முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே பிரதம கட்டுப்பாட்டாளர் டீ.வீ.குணபால மேலும் சுட்டிக்காட்டினார். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்