English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Jan, 2015 | 4:46 pm
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஜீ. சமரநாயக்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவின் வீட்டில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தனது தீர்மானத்தை அறிவித்தார்.
கடந்த 40 வருடங்களுக்கும் அதிக காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதேச அரசியல் பிரதிநிதி என்ற வகையில், இந்தத் தருணத்தில் சிறந்த தீர்மானத்தை எடுக்கவேண்டிய கடப்பாடு தனக்கிருப்பதாக இதன்போது சமரநாயக்க கூறினார்.
போதைப்பொருள் மற்றும் கெசினோக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் 8 ஆம் திகதி மக்களுக்கு கிட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்த கறைபடியாத, சிறந்த மனிதரான மைத்ரிபால சிறிசேன இன்று தேர்தலில் களமிறங்கியுள்ளதால், அனைவரும் அவருக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஜீ. சமரநாயக்க மேலும் தெரிவித்தார்.
12 Dec, 2019 | 09:24 PM
12 Dec, 2019 | 08:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS