தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Jan, 2015 | 3:59 pm

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 240 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

இந்த முறைப்பாடுகளுக்கமைய சந்தேகத்தின் பேரில் 120 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தலையொட்டி எதிர்வரும் ஓரிரு தினங்களிலும் அதிக எண்ணிக்கையிலான பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்துவதற்கு எண்ணியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தேர்தல் சட்டங்களைப் பாதுகாப்பதற்கும், தேர்தல் சட்டங்களை மீறுகின்றவர்களை கைது செய்வதற்கும் பொலிஸாருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 883 முறைப்பாடுகள் தமக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 97 பாரதூரமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்