கிண்ணியாவில் வள்ளம் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

கிண்ணியாவில் வள்ளம் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

கிண்ணியாவில் வள்ளம் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Jan, 2015 | 4:30 pm

கிண்ணியா, கப்பல்துறை, கொட்டியாரகுடாவில் வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் மேலும் ஐவர் உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

காக்காமுனை – இறங்குதுறையிலிருந்து இரண்டு சிறுவர்களும், ஆறு பெண்களும் அதிகாலை கலப்பிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் 12 வயது சிறுவனும், 2 பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். 

உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் உயிர்தப்பிய ஐந்து பேரில் மூவர் கப்பல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்