வென்னப்புவயில் நால்வர் கொலை: காணாமற்போயுள்ள காவலாளி மீது சந்தேகம்

வென்னப்புவயில் நால்வர் கொலை: காணாமற்போயுள்ள காவலாளி மீது சந்தேகம்

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 3:30 pm

வென்னப்புவ, லுணுவில பகுதியில் கொலை செய்யப்பட்ட நால்வரின் வீட்டுக் காவலாளி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் காவலாளி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் குழி ஒன்றிலிருந்து நால்வரின் சடலங்கள் நேற்று (01) மீட்கப்பட்டிருந்தன.

கொலை செய்யப்பட்ட பெண் லுணுவில வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமையாற்றி வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

குறித்த பெண் வைத்தியர் சேவைக்கு சமூகமளிக்காததால், வைத்தியசாலை ஊழியர் ஒருவர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில், வைத்தியசாலையின் ஊழியர் வீட்டைச்சுற்றித் தேடிப்பார்த்தபோது, சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியரின் கணவர் ஒரு வர்த்தகர் எனவும் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலங்கள் சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்