விவசாயி மகனுக்கு உர மானியம் மறந்து விட்டது – ஜனாதிபதி

விவசாயி மகனுக்கு உர மானியம் மறந்து விட்டது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 4:15 pm

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் கிராந்துருகோட்டையில் நேற்று (01) மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கிராந்துருகோட்டை பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஜனாதிபதி தெரிவித்ததாவது ;

[quote]இவர் விவசாயியின் மகன். இந்த விவசாயிகள் மகனுக்கு உர மானியம் மறந்து விட்டது. அவர் உர மானியம் குறித்து ஒரு வசனத்தைக்கூட பேசுவதில்லை. உர மானியம் அவர்களின் ஆட்சியில் கிடையாது. ஏனெனில், வயல் தேவையில்லை எனவும், வெளிநாடுகளிலிருந்து அரிசியைக் கொண்டுவர முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க எந்நேரமும் சிந்தித்துக் கொண்டுள்ளார். அதேபோன்று, வெளிநாட்டிலிருந்து கோதுமை மாவைக் கொண்டுவர முடியும் என்றும் அவர் எண்ணுகின்றார்ஐக்கிய தேசியக் கட்சியின் அந்தக் கொள்கையே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அப்படியென்றால், அவர் வெற்றி பெற்றால், உர மானியம் இதற்குப் பிறகு விவசாயிகளுக்குக் கிடையாது. அவர் வெற்றி பெற மாட்டார். அதனால், உங்களுக்கு உர மானியம் கிடைக்கும் என்பதனை உறுதியாக நான் கூறிக்கொள்கின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்