யாருக்கு ஆதரவு: உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்புகள்

யாருக்கு ஆதரவு: உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்புகள்

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 10:30 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு – பட்டியிருப்பு தொகுதி இணைப்பாளர் அமரசிங்கம் விநாயகமூர்த்தி, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஸ்மன் வெடருவ புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி நெல்சன், வத்தளை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சானக்க செனரத் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்