மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் 7 நாட்கள் மாத்திரமே உள்ளன – மைத்திரிபால

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் 7 நாட்கள் மாத்திரமே உள்ளன – மைத்திரிபால

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 4:02 pm

பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த பிரசாரக்கூட்டமொன்று பொரளையில் நேற்று (01) நடைபெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது,  புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன பின்வரும் கருத்துக்களைக் கூறினார்,

[quote]ஜனாதிபதி ஒருவர் 6 வருடங்கள் மாத்திரமே ஆட்சியில் இருக்க முடியும். மேலும் இரண்டு வருடங்கள் ஆட்சி புரியக்கூடிய காலம் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், தற்போது தேர்தலை நடாத்துகின்றார். வெற்றி பெற முடிந்தால் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்து விட்டு, பின்னர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு அதிலிருந்து 6 வருடங்கள் ஆட்சி செய்யவே முயற்சிக்கின்றார். முன்னெடுக்கவுள்ள அரசியல்சீரழிவு நன்றாகப் புரிக்கின்றது.

உலகிலுள்ள எந்த நாட்டில் எந்தத் தலைவர் தொடர்ச்சியாக 8 வருடங்கள் ஆட்சி செய்கின்றார். அவ்வாறான நாடொன்று குறித்து நாம் கேள்வியுறவும் இல்லை. சுதந்திரத்தின் பின்னர் இவ்வாறான முன்னணியொன்று ஸ்தாபிக்கப்படவில்லை. இது தனி ஒரு மனிதனின் பொறுப்பு கிடையாது. அனைவரது ஒன்றிணைவாகும்.

அதனால், நாங்கள் ஸ்தாபிக்கின்ற புதிய அரசாங்கமானது உங்களின் அரசாங்கம். இந்த நாட்டிலுள்ள பொதுமக்களின் அரசாங்கம். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நிறைவுறுவதற்கு இன்னும் 7 நாட்கள் மாத்திரமே உள்ளன. ராஜபக்ஸ குடும்பத்தின் விளையாட்டுக்கள் அனைத்தும் இன்னும் 7 நாட்கள் மாத்திரமே இருக்கப் போகின்றன. அதனை மிக தெளிவாகக் கூற வேண்டும்.[/quote]

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்