மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம்

மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம்

மட்டக்களப்பில் அடையாளங்காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம்

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 3:51 pm

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பகுதியில் அடையாளம் காணப்படாத சிலரால் இரண்டு கடைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடைகளுக்கு நேற்று (01) நள்ளிரவு வேளையில் சிலரால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இரண்டு கடைகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.

களுவாஞ்சிக்குடியின் இருவேறு இடங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கடை உரிமையாளர்களால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்