பிரேசில் அதிபராக தில்மா ரூசெஃப் மீண்டும் பதவியேற்பு

பிரேசில் அதிபராக தில்மா ரூசெஃப் மீண்டும் பதவியேற்பு

பிரேசில் அதிபராக தில்மா ரூசெஃப் மீண்டும் பதவியேற்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 4:35 pm

பிரேசிலின் தற்போதைய அதிபர் தில்மா ரூசெஃப் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கடுமையான போட்டிக்கிடையில் அவர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் பதவியேற்றுள்ள தில்மா ரூசெஃபுக்கு, தேக்க நிலையில் காணப்படும் நாட்டின் பொருளாதாரம்தான் மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு தில்மா ரூசெஃப் பதவியேற்றதற்குப் பின்பு, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்