தபால் மூல வாக்களிப்பிற்கு நாளையும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பிற்கு நாளையும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பிற்கு நாளையும் சந்தர்ப்பம்

எழுத்தாளர் Kanthaverl Mayooran

02 Jan, 2015 | 9:17 am

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கினை அளிப்பதற்கு நாளைய தினமும் (03.01.2015) விசேட சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்ற நாட்களில் வாக்களிக்க முடியாமல்போனவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ. அமரதாச தெரிவிக்கின்றார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களால் முன்மொழியப்பட்டுள்ள கட்சி மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் அடுத்தகட்ட ஏற்பாடுகள் குறித்து இன்றைய கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

இதுதவிர வாக்கெண்ணும் நிலையங்களுக்கான முகவர்களை நியமித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் 90 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 4 ஆம் திகதி வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிட்டார்.

வாக்காளர் அட்டை விநியோகம் நிறைவடைந்த பின்னரும், எவருக்கேனும் வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால், தமக்குரிய தபால் அலுவலகத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மாஅதிபர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்