ஜனாதிபதி புலிகளைப் பூண்டோடு அழித்ததால் தான் நிம்மதியாக வாழ்கிறோம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதி புலிகளைப் பூண்டோடு அழித்ததால் தான் நிம்மதியாக வாழ்கிறோம் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2015 | 6:45 pm

காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லா கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது;

[quote]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து இரவு பகலாக யுத்தம் செய்து, அமெரிக்கா, (…) போன்ற நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்த போது எந்த அழுத்தங்களுக்கும் செவிசாய்க்காமல், அமெரிக்க ஜனாதிபதியுடைய தொலைபேசியைக் கூட இரண்டு நாட்கள் பதிலளிக்காமல் அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். பிரபாகரனையும் கொலை செய்து, முழு இயக்கத்தையும் படுகொலை செய்தார். பூண்டோடு ஒழித்தார். ஆகவே தான் நாங்கள் இன்று நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நிம்மதியாக வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் இருந்து பறிபோன கிராமங்களில் மீண்டும் நாங்கள் குடியேறியுள்ளோம். இன்று நாடு அபிவிருத்தி அடைகிறது. நாட்டை அபிவிருத்திப் பாதையில் செலுத்தியிருக்கிறோம். உங்களுடைய பிரதேசங்களில் பல அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கிறோம்.[/quote]

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்